கைத்தறி தின நிகழ்ச்சியில் நடிகை குஷ்பூ எம்எல்ஏ வானதி சீனிவாசன் பங்கேற்பு

கைத்தறி தின நிகழ்ச்சியில் நடிகை குஷ்பூ எம்எல்ஏ வானதி சீனிவாசன் பங்கேற்பு

Update: 2024-08-21 13:18 GMT
நமது நாட்டின் பாரம்பரியமிக்க கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களின் பெருமையை உலகம் அறியச் செய்யும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி, அத்தொழில்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார் என்றும், பெண்கள் மீதான கண்ணியத்தை வளர்க்க ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் / சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தகவல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், பல்வேறு அமைப்புகள் சார்பில், கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு, தேசிய கைத்தறி நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் பாஜக சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு தலைமை வகித்தார். நடிகை குஷ்பூ, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றார். இதில், கோவை, நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, 27 கல்லூரிகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கைத்தறி ஆடைகளை அணிந்து, ஆடை அலங்கார அணிவகுப்பில் ஈடுபட்டனர். இதனை, சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், மொடக்குறிச்சி சரஸ்வதி, நடிகை குஷ்பூ உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை அவர்கள் வழங்கினர். சிறந்த நடைபயிற்சியாளர் ஸ்ரீ ஜனனி, நவீன் குமார், ஆகியோரும் கைத்தறி இளவரசி கோகிலா வாணி, கைத்தறி இளவரசன் ரமணா, கைத்தறி ராணி சூர்யா, கைத்தறி ராஜா நிஷாந்த், கைத்தறி மகாராணி சினேகா, கைத்தறி மகாராஜா தௌபிக் உள்ளிட்டோர் அந்தந்த பிரிவுகளில் பரிசுகளை பெற்றனர். இந்த நிகழ்ச்சியில், கோவை, நாமக்கல், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ மாணவிகள் போட்டியாளர்கள், கைத்தறியாளர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

Similar News