நாமக்கல் தாலுக்கா டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம்! நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் பங்கேற்பு

டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் தொடர் கோரிக்கையை ஏற்று விரைவில் மத்திய நிதியமைச்சரை சந்தித்து ஜிஎஸ்டியில் இருந்து ரீட்ரேட்டிங் தொழிலுக்கு விளக்கு அளிக்க என்னால் ஆன முயற்சியை எடுப்பேன்.! நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் உறுதி;

Update: 2025-12-20 17:57 GMT
நாமக்கல் தாலுக்கா டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சங்கச் செயலாளரும் திசா கமிட்டி உறுப்பினருமான ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி பேசியதாவது...நாமக்கல்லில் பிரதான தொழிலாக இருந்து இன்று நலிவடைந்து வரும் லாரி தொழிலை காக்க என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறேன். குறிப்பாக தற்போது பழைய வாகனங்களுக்கான தகுதி சான்றிதழ் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியதை ரத்து செய்ய கோரி மத்திய சாலைபோக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்துள்ளேன். அதுபோல் சுங்க கட்டண குறைப்பு, எல்பிஜி லாரிகளுக்கான பல்வேறு பிரச்சனைகள், மற்றும் ட்ரெய்லர் லாரிகள் உள்ளிட்ட நமது தொழில் வளர்ச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.
அதேபோல் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் தொடர் கோரிக்கையை ஏற்று விரைவில் மத்திய நிதியமைச்சரை சந்தித்து ஜிஎஸ்டியில் இருந்து தொழிலுக்கு விளக்கு அளிக்க என்னால் ஆன முயற்சியை எடுப்பேன். என்று உறுதியளித்து பேசினார்.
இந்நிகழ்வில் ரீட்ரேடிங உரிமையாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர்கள் தர்மலிங்கம், லோகேந்திரன்,பொருளாளர் மல்லீஸ்வரன், இணைச் செயலாளர் ஹரி மற்றும் வெங்கடேஷ் உள்ளிட்ட திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.பாராளுமன்ற உறுப்பினருடன் கொமதேக பொருளாளர் சசிகுமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அருள்மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News