அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ பள்ளி மாணவ மாணவியர்களுக்கு அறிவுரை வழங்கி பேச்சு*

அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ பள்ளி மாணவ மாணவியர்களுக்கு அறிவுரை வழங்கி பேச்சு*

Update: 2024-08-21 14:44 GMT
மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தை வீணடிக்க கூடாது; இது ஒரு போட்டியான உலகம்; மாணவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு சிறப்பாக படிக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்; அருப்புக்கோட்டையில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ பள்ளி மாணவ மாணவியர்களுக்கு அறிவுரை வழங்கி பேச்சு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ கலந்து கொண்டு 250 மாணவ மாணவியர்களுக்கு விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியை விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி துவக்கி வைத்தார். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அமைச்சருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது மேலும் பள்ளி மாணவியர்களின் பரத நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.‌ தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், ஒரு நல்ல நிகழ்ச்சியில் நாங்கள் உங்களை சந்திக்கிறோம்.‌‌ எங்களுக்கு தினமும் பல நிகழ்ச்சிகள் இருக்கும். நாங்கள் எத்தனை நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் அதிலிருந்து மாறுபட்டதாக கள்ளம் கபடமில்லாத மாணவர்களை சந்திக்கும் போது எங்கள் மனதில் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. நாங்களும் உங்களை போல மாணவர்களாக இருந்துள்ளோம். இந்தப் பருவம் நினைத்துப் பார்த்தால் கூட இன்னும் பத்து வருடங்கள் கழித்து மீண்டும் கிடைக்காது.‌ முந்தைய காலத்தில் தெருவுக்கு ஒரு பட்டதாரி இருந்தார். இப்போது அனைத்து வீட்டிலும் பட்டதாரிகள் உள்ளனர். மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தை வீணடிக்க கூடாது. இது ஒரு போட்டியான உலகம்.‌ முன்பு ஏதாவது ஒரு பட்டப் படிப்பு படித்தாலே வேலை கிடைத்து விடும். ஆனால் தற்போது 100 பேரை அழைத்து அதில் தகுதியானவர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கும் சூழல் உள்ளது.‌ மாணவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு சிறப்பாக படிக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் நல்ல எதிர்காலம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் வணக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது.‌ மாணவர்களின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்ட முதலமைச்சராக நம்முடைய முதலமைச்சர் உள்ளார்‌ என பேசினார்.

Similar News