ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பாக தங்களையும் ஓய்வூதிய திட்டத்தை இணைக்க கோரி தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பாக தங்களையும் ஓய்வூதிய திட்டத்தை இணைக்க கோரி தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பாக தங்களையும் ஓய்வூதிய திட்டத்தை இணைக்க கோரி தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் -50க்கும் மேற்பட்ட பங்கேற்பு... தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சி அலுவலகங்களில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் அனைவரும் தங்களையும் தமிழக அரசு ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பாக மாவட்டத் தலைவர் கணேஷ் பாண்டியன் தலைமையில் மாநிலத் துணைத் தலைவர் ராமசுப்பு முன்னிலையில் தமிழக முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சி அலுவலகங்களில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் அனைவரையும் ஓய்வு திட்டத்தில் தமிழக அரசு உடனடியாக இணைக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கை வலியுறுத்தி இன்று ஒரு நாள் தற்செயல் போராட்டம் எடுத்து தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழரசு செவி சாய்க்கவில்லை என்றால் வருகின்ற 27ம் தேதி சென்னை பணகல் மாளிகை முன்பு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றும் வரை அனைத்து ஊராட்சி செயலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்