நெல்லை மாநகர திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் பேட்டை பகுதி 16வது வார்டு உழவர் சந்தை பகுதியில் நேற்று இரவு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். புதிதாக இணைந்த மகளிர்களை மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் வரவேற்றனர். இந்த நிகழ்வின் பொழுது மாநகர திமுக துணை செயலாளர் அப்துல் கையூம், மாவட்ட மகளிர் தொண்டரணி தலைவர் பத்மா, மாநகர மகளிர் அணி அமைப்பாளர் சௌந்தரம் முத்துராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.