நஞ்சியம்பாளையம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை பயிற்சி பெண் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.

பெண் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது;

Update: 2024-08-22 07:30 GMT
நஞ்சியம்பாளையம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை பயிற்சி பெண் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நஞ்சியம்பாளையம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் மூலம் தானியங்களில் பயிர் உற்பத்தி தொடர்பான புதிய தொழில் நுட்பங்கள் மகளிர் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேற்கண்ட பயிற்சியில் விதைச்சான்று அலுவலர் மனோஜ்குமார் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விதைச்சான்று மற்றும் உயிர்மச் சான்றளிப்பு துறை நடைமுறைகள் தொடர்பாக பயிற்சி அளித்தார். மேலும் பயிற்சியில் விதைச்சான்று அலுவலர் தெரிவித்ததாவது, அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர் இரகங்களின் உயர் தரமான விதைகளை உற்பத்தி செய்து சான்றளிப்பின் மூலம் விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்வதே விதைச்சான்றளிப்பு துறையின் முக்கிய நோக்கமாகும். விதைகள் கருவிதை, வல்லுநர் விதை, ஆதாரநிலை விதை மற்றும் சான்று நிலை விதை என்ற நிலைகளை கொண்டுள்ளது. அதில் வல்லுநர் விதையானது வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களில் கருவிதைகளை கொண்டு கண்காணிப்புக் குழுவின் மேற்பார்வையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த சான்றட்டையின் நிறம் - மஞ்சள். ஆதார நிலை விதையானது வல்லுநர் விதைகளை கொண்டு அரசு விதைப்பண்ணை மற்றும் விவசாயிகளின் நிலங்களில் விதைச்சான்றளிப்பு அலுவலர்களின் மேற்பார்வையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த சான்றட்டையின் நிறம் வெள்ளை. சான்று நிலை விதையானது ஆதராநிலை விதைகளை கொண்டு விவசாயிகளின் நிலங்களில் விதைச்சான்றளிப்பு அலுவலர்களின் மேற்பார்வையில் உற்பததி செய்யப்படுகிறது. இந்த சான்றட்டையின் நிறம் - நீலம். விதைச்சான்று நடைமுறைகள் விதைப்பண்ணை பதிவு செய்தல், வயலாய்வு செய்தல், சுத்திகரிப்பு செய்தல், விதை மாதிரிகள் எடுத்தல் மற்றும் சான்றட்டைகள் பொருத்துதல் ஆகிய நிலைகளை கொண்டது. மேற்கண்ட பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலர் திரு.முத்துராஜ், வட்டார அட்மா தொழில்நுட்ப மேலாளர்கள் பிரகாஸ், செல்வி.நான்சி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் செல்வி.சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News