கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை போலீசார் விசாரணை!

குற்றச் செய்திகள்

Update: 2024-08-22 12:05 GMT
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேலப்பட்டு கிராமத்தில் புகழ்பெற்ற பிச்சாளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அப்பகுதி கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் கோவில் உண்டியல் பிரிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை அப்பகுதியிலுள்ள மக்கள் கோவில் திறந்து இருப்பதை பார்த்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற கிராம மக்கள் கோவிலில் உள்ள உண்டியல் திருடி சென்றது பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே அப்பகுதியில் உள்ள மக்கள் தேடி பார்க்கும் பொழுது அந்த கிராமத்திற்கு அருகே உள்ள குளக்கரையில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த தங்க பொட்டு, காசு மற்றும் உண்டியலில் உள்ள பணத்தை திருடி சென்றதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த அறந்தாங்கி காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் விசாரணை செய்தார். கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று உண்டியல் பிரிக்கப்படாமல் இருந்த நிலையில் உண்டியலில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் பணம் மற்றும் தங்க பொட்டு, காசு இருந்ததாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Similar News