கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பழைய அரிய நாணயங்களின் கண்காட்சி
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பழைய அரிய நாணயங்களின் கண்காட்சி
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் சார்பாக பழங்கால நாணயங்கள், கடிதங்கள், அஞ்சல் தளைகள், அஞ்சல் அட்டைகள், பத்திரங்கள் மற்றும் அரிய பொருட்களுக்கான கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியின் துவக்கவிழா கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு. ஆர் சீனிவாசன் அவர்கள் வாழ்த்துகளோடு தொடங்கியது, இக்கண்காட்சியினை கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் மோகன் தொடங்கி வைத்தார். மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் மா.கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்டம், தொழிலதிபர் சுப்ரமணியம் கலந்துகொண்டு இக்கண்காட்சியில் இடம்பெற்ற பொருள்களின் வரலாறுகள், நாணயங்களைப் பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்தார். இக்கண்காட்சியில் உலகளவில் பண்டைய மன்னர்களால் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், இந்தியாவில் மன்னர் ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், தற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட, புலக்கத்தில் இருந்த நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் ஆகியன கண்காட்சியில் இடம்பெற்று இருந்தன. இதில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இக்கண்காட்சியில் கல்வி நிறுவனங்களின் தலைமை திட்ட நோக்க அதிகாரி முனைவர் எஸ். பாலுசாமி அவர்கள், பிற கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர், இயக்குனர்கள், துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.