கரூரில் ,தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அலுவலர் பதவியினை மீள தரம் உயர்த்தி வழங்க உள்ள கோப்பின் மீது ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூரில் ,தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அலுவலர் பதவியினை மீள தரம் உயர்த்தி வழங்க உள்ள கோப்பின் மீது ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூரில் ,தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அலுவலர் பதவியினை மீள தரம் உயர்த்தி வழங்க உள்ள கோப்பின் மீது ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு நில அளவை அலுவலர் சங்கம் சார்பில், தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அலுவலர் பதவியினை மீள தரம் உயர்த்தி வழங்க உள்ள கோப்பின் மீது ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சங்கத்தின் மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமையில் கவன ஈர்ப்பார்ப்பட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் மோகன்ராஜ், மாவட்ட இணை செயலாளர் குணசுந்தரி, மாவட்ட செயலாளர் தங்கவேல், அரசு துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட மாவட்ட அளவிலான நில அளவையர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அலுவலர் பதவியினை மீள தரம் உயர்த்தி வழங்க உள்ள கோப்பின் மீது ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியும், நில அளவை பதிவேடுகள் துறையில் நிலுவையில் உள்ள காலி பணியாளர்களின் நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.