புது கோட்டை மேடு பகுதியில் தொடர் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்து சேதம். அமைச்சர் நிவாரண உதவி வழங்கினார்.

புது கோட்டை மேடு பகுதியில் தொடர் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்து சேதம். அமைச்சர் நிவாரண உதவி வழங்கினார்.

Update: 2024-08-22 15:24 GMT
புது கோட்டை மேடு பகுதியில் தொடர் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்து சேதம். அமைச்சர் நிவாரண உதவி வழங்கினார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள புது கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா வயது 62. இவரது கணவர் மூவேந்தர் இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இந்த நிலையில் ஜெயா என்பவர் புது கோட்டை மேடு பகுதியில் வசித்து வருகிறார். இவரது மகன் சுரேஷ் இவர் பெருந்துறையில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று சுரேஷ் தனது அம்மாவை பார்ப்பதற்காக பெருந்துறையில் இருந்து கிளம்பி தாராபுரம் தனது தாய் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது தாய் ஜெயா சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது சுரேஷ் என்பவர் செல்போனில் வீட்டின் வெளியே திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.திடீரென வீட்டின் ஒரு பகுதியான சமையலறை இடிந்து விழுந்தது. இதில் மற்றொரு அறையில் இருந்த ஜெயா அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக தொடர் மலை காரணமாக வீட்டின் மண் சுவர் நனைந்ததன் காரணமாக வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனை அறிந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் புது கோட்டை மேடு பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததை அறிந்து அவர்களுக்கு நிவாரண உதவியை வழங்குவதற்காக சென்றார். அப்போது திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம், தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன், நகர்மன்றத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் வார்டு உறுப்பினர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News