தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அண்ணா சிலை அருகே பட்டாசு வெடிக்கும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டம்
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அண்ணா சிலை அருகே பட்டாசு வெடிக்கும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டம்;
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அண்ணா சிலை அருகே பட்டாசு வெடிக்கும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா சிலை அருகே தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட மகளிர் அணி தலைவரும் கவுண்டச்சி புதூர் ஊராட்சி மன்ற தலைவருமான செல்வி ரமேஷ் தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் இன்று தனது கட்சிக்கொடி அறிமுகம் செய்து கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இதன் ஒரு நிகழ்வாக தாராபுரம் அண்ணா சிலை அருகே தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பட்டாசுகள் வெடித்தும் இணைப்புகள் வழங்கிய மகிழ்ச்சியை கொண்டாடினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சொர்க்கம் ரமேஷ் ஏற்பாடு செய்திருந்தார். இதில் நகர தலைவர் சார்லி விக்டர், செயலாளர் ரமேஷ்,இளைஞர் அணி தலைவர் கதிர்,செயலாளர் அபுதாகிர், தகவல் தொழில் நுட்ப அணி தலைவர் ஹரிஹரசுதன், செயலாளர் பரத் பாலாஜி , தொண்டரணி தலைவர் பிரபு, ஒன்றிய இளைஞர் அணி ராம்குமார், மேற்கு ஒன்றிய தலைவர் கௌதம், செயலாளர் ரமேஷ்,கிழக்கு ஒன்றிய தலைவர் ஶ்ரீ காந்த், செயலாளர் பன்னீர் செல்வம், நகர மகளிர் அணி தலைவர் சந்தனம்மாள்,தாராபுரம் மேற்கு ஒன்றிய மகளிர் அணி தலைவர் சுமதி,மூலனூர் ஒன்றிய மகளிர் அணி தலைவர்கள் சந்திரமதி மற்றும் சங்கீதா,பொறியாளர் அணி ஜபர்ஷதீக் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.