வேளாண்மை -விதைசான்றளிப்பு துறைக்கு தேவையான சான்றட்டைகள் அச்சிடும் பணி பணியை துரிதப்படுத்த விதை உற்பத்தியாளர்கள் கோரிக்கை
வேளாண்மை -விதைசான்றளிப்பு துறைக்கு தேவையான சான்றட்டைகள் அச்சிடும் பணி பணியை துரிதப்படுத்த விதை உற்பத்தியாளர்கள் கோரிக்கை;
வேளாண்மை -விதைசான்றளிப்பு துறைக்கு தேவையான சான்றட்டைகள் அச்சிடும் பணி பணியை துரிதப்படுத்த விதை உற்பத்தியாளர்கள் கோரிக்கை சம்பா பருவ சாகுபடியை சமாளித்திட துரிதமான அச்சுபணியை உறுதிபடுத்திட வலியுறுத்தி கோரிக்கை தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவிலான உற்பத்தியாளர்கள் சம்பா பருவத்திற்கான நெல் விதைகளை உற்பத்தி செய்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விதை நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். விதை நெல்களை விற்பனை செய்வதற்காக விதை சான்று நிறுவனத்தினர் மூலமாக தரம் ஆய்வு செய்யப்பட்டு தரமான விதைகள் என உறுதியளித்த பின்னர் தான் இதை உற்பத்தியாளர்கள் விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். விதைசான்று பணியின் நிறைவு பகுதியில் தங்களது துறையின் சார்பாக அச்சிட்டு வழங்கப்படும் சான்றட்டைகளை கொண்டு மட்டுமே விதை விநியோகத்தை நிர்வகிக்க முடியும் என்பதை அறிகிறோம். ஒவ்வொரு பயிர் ஆண்டிலும் தேவையான சான்றட்டைகளை சான்று துறையின் தேவைப்பட்டியல் பெற்று பல்வேறு தவணைகளில் அச்சிட்டு வழங்கிடும் நடைமுறையில் சுணக்கம் ஏற்பட்டால் அது விதை விநியோக சங்கிலியை துண்டித்து சான்று பெறாத தரம் ஊர்ஜிதம் செய்யப்படாத விதைகள் விதை சந்தையில் ஊடுருவிடும் வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தி துறையினை சார்ந்துள்ள அனைத்து தரப்பினரின் நலனையும் கருத்திறகொண்டு விதை சான்றளிப்பு துறையின் முன்னுரிமை தேவையான சான்றட்டை அச்சிடும் பணியினை துரிதமாக மேற்கொண்டு விதை உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட வேளாண் சமூகத்திற்கு உதவிட வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தனர்.