தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை சார்பில், இன்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பணியில் இறந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களை பாதுகாத்திட கருணை அடிப்படையில் பணி நியமனங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ஊரக வளர்ச்சி துறை ஊழியர் மீது திணிக்கப்படும் பிற துறை பணிகள் முற்றிலும் கைவிட வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. இந்தப் போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், தாந்தோணிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் பணியாற்றக்கூடிய ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.