பாப்பக்காபட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பாப்பக்காபட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பாப்பக்காபட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பாப்பக்காபட்டி கிராமத்தில், ஸ்ரீ மகா மாரியம்மன் விநாயகர், பாலமுருகன்,காளியம்மன், பிடாரியம்மன், முண்டி கருப்பு, ஒண்டி கருப்பு ஆகிய பரிவார தெய்வங்கள் அமர்ந்து அருள் பாலித்து வரும் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலைப் புனரமைத்து கும்பாபிஷேக விழா நடத்துவது என்று விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் முடிவு செய்து, புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, இன்று கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனையொட்டி கடந்த ஆகஸ்ட் 20ம் அய்யர்மலையில் இருந்து காவிரி நீர் தீர்த்தம் , அலங்கார குதிரை மற்றும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. புனித நீர் கும்பத்தினை சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து மகா கணபதி பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, விக்னேஷ்வர பூஜை, லட்சார்ச்சனை, நாடி சந்தனம், பூர்ணாஹூதி, திரவியாஹூதி, மகா தீபாரதனை உள்ளிட்ட 4 கால யாக வேள்வி பூஜைகளை செய்தனர். இன்று காலை 4ம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும், புனித நீர் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசத்திற்கு புனித நீரினை ஊற்றினர். அதனை தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. பாப்பக்காப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.