கெங்கவல்லி:தலைவாசல் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய குழு கவுன்சிலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஒன்றிய தலைவர் பேசிய போது ஒன்றிய கவுன்சிலர்கள் அனைவரும் உடனடியாக உங்களுடைய பகுதியில் உள்ள திட்டங்களை மனுவாக அளிக்க வேண்டும் என்றும் நிதி ஒதுக்க தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.