விருதுநகர் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்
விருதுநகர் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்
விருதுநகரில் இரயில் நிலைய புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் விருதுநகர் ரயில் நிலைய புனரமைப்பு பணிகளுக்காக ரூபாய் 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதற்கான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் " ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது, விருதுநகர் இரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகளை ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் சட்டபேரவை உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசனுடன் ஆய்வு செய்தோம். விருதுநகர் ரயில் நிலையத்தை அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட பணிகள் டிசம்பர் மாதம் நிறைவடையும் முதல் நடைமேடையில் இருந்த 4வது நடைமேடைக்கு செல்லும் வகையில் மின் தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டு அமைக்கும் பணியானது டிசம்பர் மாதத்திற்குள் தமிழக வெற்றிக் கழக கொடி அறிமுகம் குறித்த கேள்விக்கு? கொடி கலர் புல்லாக உள்ளது என கிண்டலாக பதிலளித்தார். சுரேஷ்கோபி சினிமாவில் நடிக்கத்தான் ஆசைப்படுகிறேன். என்னை அமைச்சரவையில் இருந்து நீக்கினாலும் பரவாயில்லை என தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு? பிரதமர் மோடி வலிமையிழந்து விட்டார். அவரிடம் ஒரு இணை அமைச்சரே இவ்வாறு பேசுகிறார் என்றால் மோடி வலிமையிழந்து விட்டார் எனவே அவரை நீக்க தைரியமில்லை. பட்டாசுக்கு வெடி மருந்து சட்டத்தை மாற்ற பாஜக அரசு முயற்சித்து வருகிறது. பியூஸ் கோயல் பட்டாசு உற்பத்தியாளர்களை அழைத்துப் பேச வேண்டும். 10 ஆண்டுகளாக பட்டாசு தொழிலை மாற்றாந்தாய் மனப்பாண்மையுடன் பார்த்து வருகிறது. சட்டம் முழு வடிவம் பெருவதற்கு முன்பே தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் கருத்து கேட்க வேண்டும். தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என தகவல் வெளியானதே என்ற கேள்விக்கு? இதுகுறித்து முதலமைச்சரே தெளிவாக பதில் கூறி விட்டார். இது பத்திரிiகாயளர்களின் தவறு. கோட்டையில் உள்ள பத்திரிiகாயளர் யார் கூறுவதையும் கேட்காமல், முதலமைச்சர் கூறவதை கேட்க வேண்டும் என தெரிவித்தார். நரேந்திர மோடி அவரது 75 வயதில் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டுமென சுப்பிரமணியசுவாமி கூறியருப்பது குறித்த கேள்விக்கு? சுப்பிரமணியசுவாமியின் விருப்பம் நிறைவேற எனது வாழ்த்துக்கள் என பதில் கூறினார்.