சர்வதேச இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
சர்வதேச இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
விருதுநகரில் சர்வதேச இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி -200 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள்பங்கேற்பு... இந்தியா முழுவதும் தேசிய இளைஞர்கள் தினம் வருடா வருடம் ஆகஸ்ட் 23ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் தேசபந்து மைதானம் முன்பு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், சென்னை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, விருதுநகர் ரோட்டரி கிளப் மற்றும் விருதுநகர் கிங்டம் இணைந்து நடத்தும் எச்ஐவி ,எய்ட்ஸ் போதை ஒழிப்பு ,இளைஞர்கள் நலம் மற்றும் சேவைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தப் பேரணியில் கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் , ஒரு நாட்டின் எதிர்காலமே இளைஞர்கள் கையில் தான், இளைய சமூகத்தின் முன்னேற்றம் எதிர்கால பூமியின் நம்பிக்கை, 100 இளைஞர்களை கொடுங்கள் இந்தியாவை மாற்றி காட்டுகிறேன், சிலை போல் நின்றிருந்தாலும் சிந்தனையோடு நின்றிரு இளைஞனே, இளைஞர்களின் ஆற்றல் எதிர்காலத்தின் வழிகாட்டல், இளையோர் முயன்றால் நீளும் இன்பமே உலகை ஆளும் திருமணம் வரை காத்திரு எச்ஐவி வருமா யோசித்திரு, ஒருவனுக்கு ஒருத்தி என்பது பண்பாடு இச்செய்தி எச்ஐவிக்கு இதுவே கட்டுப்பாடு, உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திய படி பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 200 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர் இந்தப் பேரணியாவது விருதுநகர் தேசபந்து மைதானத்தில் ஆரம்பித்து மெயின் பஜார், தெப்பம், நகராட்சி அலுவலகம் வழியாக எம்ஜிஆர் சிலையில் முடிவடைந்தது