கே. புதுப்பட்டியில் தகாத உறவு தடம்மாறிய மனைவி. தூக்கிட்டு தற்கொலை செய்த கணவன்.
கே. புதுப்பட்டியில் தகாத உறவு தடம்மாறிய மனைவி. தூக்கிட்டு தற்கொலை செய்த கணவன்.
கே. புதுப்பட்டியில் தகாத உறவு தடம்மாறிய மனைவி. தூக்கிட்டு தற்கொலை செய்த கணவன். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, கே. புதுப்பட்டி, குடிதெருவை சேர்ந்தவர் பூவரசன் வயது 27. இவரது மனைவி கௌசல்யா. இவர்கள் இருவருக்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதனிடையே கடந்த ஓராண்டாக கௌசல்யா ராஜா என்ற நபருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்தார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆகஸ்ட் 19ஆம் தேதி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனால் விரக்தி அடைந்த மனநிலையில் இருந்த பூவரசன், ஆகஸ்ட் 22ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த பூவரசனின் தாயார் செல்வி வயது 43 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த பூவரசனின் உடலை உடற்கூறாய்வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் லாலாபேட்டை காவல் துறையினர்.