திருப்பத்தூரில் தெருக்களில் வெளியேறும் கழிவு நீரால் பொதுமக்கள் பாதிப்பு
திருப்பத்தூரில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை மூடிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் பாதாள சாக்கடை மூடிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தெருக்களில் தேங்குவதால் நோய் தொற்றுக்கு ஆளாகும் பொதுமக்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு தோல் நோய்களால் பள்ளி மாணவர்கள்அவதிபட்டு வருவதாக கூறப்படுகிறது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 15 ஆவது வார்டு பாரதிதாசன் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 1000த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள பாதாளசாக்கடை கழிவுநீர் கடந்த சில மாதங்களுக்கு மேலாக வெளியேறி சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடமும்,அந்த வார்டு கவுன்சிலரிடமும் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை இச்சம்பவம் குறித்து புகார் மனு அளித்துள்ளனர். இது புகார் குறித்து அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் கனமழை பெய்து வந்ததால் மழைநீர்யுடன் ,பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து தெருக்களில் சாலைகளிலும் ஆங்காங்கே தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு தோல்நோய் களால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் அதற்கான மருந்து மாத்திரைகளை தற்போது எடுத்து கொண்டு வருவதாக கூறப்படுகிறது எனவே உடனடியாக பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறுவதை அதிகாரிகள் சீர் அமைத்து தராவிட்டால் அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட போவதாக தெரிவித்துள்ளனர்.