திருப்பத்தூரில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
திருப்பத்தூரில் தனியார் செல்போன் டவர் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார்
திருப்பத்தூர் மாவட்டம் தில்லை நகர் பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நகர காவல் நிலையத்தில் புகார் மனு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தில்லை நகர் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் சில வருடங்களுக்கு முன்பு இந்த பகுதியில் தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர் இதைக் குறித்து அப்பகுதி மக்கள் செல்போன் டவர் அமைத்தால் ஏற்படும் கதிர்வீச்சுகளால் ஏற்படும்பாதிப்புகளை குறித்து மாவட்டஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது மீண்டும் இந்நிலையில் அப்பகுதியில் தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர் இதை குறித்து மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் இடம் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்ததாக கூறப்படுகின்றது மற்றும் நகர காவல்நிலையத்தில் எதிர்ப்பு தெரிவித்து புகார் அளித்தனர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது இந்த பகுதியில் குடியிருப்பு வாசிகள் மிகுதியாக உள்ளனர் இந்த பகுதியில் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் செல்போன் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தி வைத்திருந்தோம் இன் நிலையில் மீண்டும் டவர் அமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர் செல்போன் டவர் அமைத்தால் கதிர்வீச்சுகளால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை புற்றுநோய் மற்றும் மூளையை செயலிழக்கக்கூடிய கொடுமையான பல்வேறு நோய்த் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்றும் செல்போன் டவர் அமைக்க கூடாது இதைக் குறித்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தோம் இவ்வாறு கூறினார்