தொடர் மழையால் வெங்காய பயிர்கள்சேதம் .விலை சரிவால் பட்டறை போட்டு ஸ்டாக் வைக்கும் விவசாயிகள்
தொடர் மழையால் வெங்காய பயிர்கள்சேதம் .விலை சரிவால் பட்டறை போட்டு ஸ்டாக் வைக்கும் விவசாயிகள்;
தொடர் மழையால் வெங்காய பயிர்கள்சேதம் .விலை சரிவால் பட்டறை போட்டு ஸ்டாக் வைக்கும் விவசாயிகள் தொடர் மழையால் வெங்காய பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. விலை சரிவால் அறுவடை செய்த வெங்காயத்தை பட்டறை போட்டு விவசாயிகள் ஸ்டாக் வைத்து வருகின்றனர் . தாராபுரம் பழைய அமராவதி புதிய அமராவதி மற்றும் பி.ஏ.பி பாசன பகுதிகளில் சுமார் 30ஆயிரம் ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டது. சுமார் 12 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்த வெங்காயத்தை விவசாயிகள் அறுவடை செய்து உள்ளனர். மேலும் வெங்காயமும் விளைநிலங்களில் பறிக்கும் நிலையில் தொடர் மழை பெய்ததால் அழுகி விட்டது. அழுகிய வெங்காயத்தை விவசாய நிலங்களில் இருந்து பறிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது விலை சரிந்துள்ளது . கடந்த ஆண்டுகளில் மகசூல் 10 டன் வரை கிடைத்தது .இந்த ஆண்டு 5 டன் அளவிற்கே கிடைக்கிறது .மேலும் விலையும் சரிந்து மழையால் பாதிக்கப்பட்ட வெங்காயம் கிலோ ரு 20 க்கும் ஓரளவு தெளிவான வெங்காயம் கிலோ ரு 30 முதல் 35 வரை மட்டுமே விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. ஏக்கருக்கு ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை செலவு செய்த விவசாயிகளுக்கு இந்த விலை கட்டுபடியாகவில்லை . ஆகவே வெங்காயத்தை விவசாய நிலங்களிலே தரை பட்டறை போட்டு விவசாயிகள் ஸ்டாக் வைத்து பாதுகாத்து வருகின்றனர் . மழை பெய்யும் காலங்களில் மட்டும் பிளாஸ்டிக் பேப்பரை போட்டு மூடி வைக்கின்றனர் . இத்தகைய தரை பட்டறைகளில் சுமார் ஒரு மாதம் வரை வெங்காயத்தை ஸ்டாக் வைக்க முடியும் அதற்குள் விலை சுமார் கிலோரு 45 முதல் ரு55 வரை உயரும் என நம்பிக்கையுடன் விவசாயிகள் காத்திருப்பதாக கோவிந்தாபுரம் விவசாயி ரமேஷ் கூறினார்.