சாலை சந்திப்பு மேம்பாட்டு பணி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு
சாலை சந்திப்பு மேம்பாட்டு பணி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு;
சாலை சந்திப்பு மேம்பாட்டு பணி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு தாராபுரம் அருகே உள்ள மூலனூர் உட்கோட்டத்தை சார்ந்த சாலை சந்திப்பு மேம்பாட்டுப் பணிகளை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தாராபுரம் அருகில் பொள்ளாச்சி தாராபுரம் கரூர் மாநில நெடுஞ்சாலையில் மதுக்கம்பாளையம் பிரிவு அருகே தாராபுரம் புறவழிச்சாலை சாலை பிரிகிறது. இச்சந்திப்பில் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ளது. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில சமயங்களில் விபத்துக்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. இங்கு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இந்த சந்திப்பு பகுதியில் விபத்து மற்றும் நெரிசலை தவிர்க்க மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறையினரால் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.2.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சாலை சந்திப்பு மேம்பாட்டுப் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள இடத்தினை நெடுஞ்சாலைத்துறை சாலைப் பாதுகாப்பு கண்காணிப்புப் பொறியாளர் கார்த்திகேயன் அவர்கள் ஆய்வு செய்தார். ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப்பொறியாளர் வெ.ராணி, சாலைப் பாதுகாப்பு கோட்டப்பொறியாளர் முருகபூபதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். சந்திப்பு பகுதியில் சாலையை இருபுறங்களிலும் விரிவுப்படுத்தி சென்டர்மீடியன் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. எனவே, இப்பகுதியில் விரைவில் சாலைப் பாதுகாப்பு மேம்பாட்டுப் பணிகளை துவக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.