விராலிமலை: இலுப்பூர் தாலுகா பரம்பூரை சேர்ந்தவர் அஸ்வத் அலி(26). இவர் சவுதி அரேபியாவில் வேலைபார்த்து வந்தார். குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிக்காக விடுமுறையில் சொந்த ஊருக்கு வந் தார். நேற்று காலை விராலிமலை அடுத்த ராஜகிரி என்ற இடத்தில் பைக்கில் சென்றபோது எதிரே விராலிமலை நோக்கி வந்த மற்றொரு பைக்குடன் நேருக்கு நேர் மோதியது. இதில், பலத்த காயம டைந்த அஸ்வத் அலி அதே இடத்தில் உயிரிழந்தார். மற்றொரு பைக்கில் வந்த விராலிமலை எம்ஜிஆர் நகரை சேர்ந்த முருகானந்தத்துக்கு லேசான காயம் ஏற்பட்டது. விராலிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.