உடுமலை அருகே காட்சி பொருளாக உள்ள சுகாதார வளாகம்
பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் கண்ணம நாயக்கர் ஊராட்சியில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கட்டி முடிக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் திறக்கப்படாமல் காட்சி பொருளாகவே உள்ளது எனவே சம்பந்தப்பட்ட கண்ணமநாயக்கனூர் ஊராட்சி நிர்வாகம் பொதுமக்கள் பயன்படுத்தும் விதமாக சுகாதார வளாகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்