தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சாலை விபத்துக்கள்!மத்திய அரசு அறிக்கை....
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சாலை விபத்துக்கள்! மத்திய அரசு பரபரப்பு அறிக்கை...;
இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகள் ஏற்படும் மாநிலமாக தமிழ்நாடு மாறி இருப்பது, பாராளுமன்றத்தில், மாண்புமிகு மத்திய சாலைப் போகுவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்கள் அளித்துள்ள அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த 2021 – 2024 நான்கு ஆண்டுகளில், 2,54,526 சாலை விபத்துகள் தமிழகத்தில் பதிவாகியிருக்கின்றன. நாட்டின் மற்ற எந்த மாநிலங்களிலும், இத்தனை விபத்துகள் ஏற்படவில்லை. தமிழகத்தில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சாலை விபத்துக்களால், தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 50 பேர் உயிரிழக்கின்றனர். ஆகவே சாலை சீரமைப்பு போக்குவரத்து கட்டுப்பாடு போன்ற விதிகளை அமல்படுத்தினால் மட்டுமே தமிழகத்தில் சாலை விபத்தில் ஏற்படும் உயிர் இழப்பை தடுக்க முடியும்.