சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து கர்ப்பமாக்கியதாக கைதான ஒடிசா மாநில இளைஞர்; போலீசாரிடமிருந்து தப்பி ஓட்டம்!!

சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து கர்ப்பமாக்கியதாக கைதான ஒடிசா மாநில இளைஞர் போலீசாரிடமிருந்து தப்பி ஓடினார்.;

Update: 2025-12-17 04:16 GMT

புதுக்கோட்டை கறம்பக்குடி அருகே 15 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து கர்ப்பமாக்கிய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரா கமாங்கா என்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஜெயிலில் அடைக்க கொண்டு சென்ற போது கைதி போலீசாரிடமிருந்து ஜெயில் வாசல் அருகே தப்பி ஓடினார். இதை அடுத்து அவரை தேடும் பணியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

Similar News