திமுகவினர் அரசியல் லாபத்திற்காக உங்களைப் பயன்படுத்துகின்றனர்; அதிமுக மாணவர் அணி சார்பில் துண்டு பிரசுரம்!!
வத்தலக்குண்டு பகுதியில் மாணவர் அணி ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டி தலைமை தாங்கி திரளாக சென்று மாணவ மாணவியர்களிடம் விழிப்புணர்வு பிரசுரங்களை விநியோகித்து வருகிறார்.;
அதிமுக மாணவர் அணி சார்பில் தமிழகமெங்கும் உள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் இடம் துண்டுப் பிரசுரங்கள் கொடுக்கப்பட்டது. அதில் திமுக அரசு மாணவ மாணவியர்களுக்கு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த லேப்டாப் கொடுக்கும் திட்டத்தை நிறுத்தியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது தொடர்பாக, தற்போது தமிழ்நாடுஅரசு 10 லட்சம் மாணவ மாணவியருக்கு லேப்டாப் வழங்கப் போவதாக அறிவித்திருந்தார்கள். அதைக் காரணம் காட்டி அதிமுகவினர் மாணவ மாணவியர்கள் இடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திமுகவினர் அரசியல் லாபத்திற்காக உங்களைப் பயன்படுத்துகின்றனர் என்ற வாசகங்களை உள்ளடக்கி பிரசுரங்கள் விநியோகித்தனர். வத்தலக்குண்டு பகுதியில் மாணவர் அணி ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டி தலைமை தாங்கி திரளாக சென்று மாணவ மாணவியர்களிடம் பிரசுரங்களை விநியோகித்து வருகிறார்.