அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை துவக்கம்

துவக்கம்

Update: 2024-08-27 01:51 GMT
திருக்கோவிலூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 1975-76 ம் ஆண்டு மாணவர்கள் சார்பில் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் கிளாஸ் அமைத்து பள்ளிக்கு ஒப்படைக்கப்பட்டது.திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, முன்னாள் மாணவர்கள் அமைப்பின் சார்பில் பள்ளியின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக 1975-76ம் இறுதி ஆண்டு முன்னாள் மாணவர் அமைப்பின் சார்பில், ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் வகுப்பறைக்கு தேவையான சேர் உள்ளிட்ட ரூ. 2.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறையை ஏற்படுத்தி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கும் விழா நேற்று நடந்தது.தலைமை ஆசிரியர் பாஸ்கரன் வரவேற்றார். முன்னால் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சண்முகம், முன்னாள் மாணவர் அமைப்பைச் சேர்ந்த கோதம் சந்த், குஷல்ராஜ், ஆதிசத்தியமூர்த்தி, அசோக் குமார், குருராஜன் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற அப்போதைய ஆசிரியர்களான பாலசுப்பிரமணியன், கிருஷ்ணமூர்த்தி, நாகராஜ்ராவ், தேசிகன், காத்தவராயன், ரகோத்தமராவ் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Similar News