உடுமலையில் பொதுப்பணி துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் மண்டல பாசனத்திற்கு கடந்த 18ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது இந்த நிலையில் புதுப்பாளையம் கிளை கால்வாய் மூலம் அடிவள்ளி பகிர்மான கால்வாயில் மூலம் கடந்த 20ஆம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு அதில் முதல் சுற்று 5 நாட்கள் அடிவள்ளி பகிர்மான கால்வாயில் உள்ள 7 மடைகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு 26ஆம் தேதி இன்று அடைத்து விட்டனர் . ஆனால் அடிவள்ளி பகிர்மான கால்வாய்க்கு உட்பட்ட 170 ஏக்கரில் 70 ஏக்கர் நிலத்திற்கு தண்ணீர் முழுமையாக சென்றடையவில்லை இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிப்படையும் நிலையில் இன்று நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது விவசாயிகள் கூறியதாவது .. அடிவள்ளி பகிர்மான கால்வாயில் சட்டவிராதமாக கான்கிரீட் சுவர் அமைத்தும் பபெரிய குழாய் அமைப்பு தண்ணீரை திருடி உள்ளனர் இதனால் கடைமடை வரை உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் கிடைக்கவில்லை இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் தண்ணீரை முறைகேடாக திருடி உள்ளதால் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர் எனவே சட்ட விரோதமாக வாய்க்காலை உடைத்தும் , பெரிய பைப்லைன் அமைத்து பாசன நீரை திருடியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தும் பாசன நீர் மிகவும் சுற்றி கிடைக்காத விவசாயிகளுக்கு முதல் சுற்றில் கிடைக்க வேண்டிய அளவு தண்ணீரை கிடைப்பதற்கான வழிவகை செய்ய வேண்டும் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் விவசாயிகளை ஒன்று திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது