கள ஆய்வில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்!!

மாவட்ட ஆட்சியர் ச.உமா, பள்ளிபாளையம் நகராட்சி பகுதிகளில் புதிய குடும்ப அட்டை வழங்குவது குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-08-27 11:12 GMT
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி, எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாவட்ட ஆட்சியர் பல்வேறு துறை சார்ந்த பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பள்ளிபாளையம் நகராட்சி பகுதிகளில் புதிய குடும்ப அட்டை வழங்குவது குறித்து கள ஆய்வு மேற்கொண்டு, ஆவணங்களை பதிவேடுகளுடன் ஒப்பிட்டு சரிபார்த்தார். தொடர்ந்து, எலச்சிபாளையம் அரசினர் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களின் எண்ணிக்கை, பயிலும் வகுப்பு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், மாணவர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் கலந்துரையாடி நன்கு கல்வி பயிலுமாறும், அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது குறித்தும் எடுத்துரைத்தார்.

Similar News