கரூரில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகம்.
கரூரில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகம்.
கரூரில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகம். கரூரில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் சிறப்பாக செயல்பட்டது என்றும், தற்போது உள்ள திமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்திற்கு போதிய நிதி ஒதுக்காமலும், பல மாதங்களாக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி, நிலுவை தொகை வழங்கப்படவில்லை என்றும், கருணை அடிப்படையில் நியாயமாக வழங்கக் கூடிய வேலை வாய்ப்புகளை கூட வழங்கவில்லை என்ற பல குற்றச்சாட்டுகளை துண்டு பிரசுரமாக அச்சிட்டு அதனை இன்று அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை கரூர் மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான திருநாவுக்கரசு, கரூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்களிடம் வழங்கினர். அப்போது தொழிற்சங்க நிர்வாகிகளும் உடன் சென்று, பொது மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கி திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்து கூறினர்.