மக்களுடன் முதல்வர் முகாம் அமைச்சர் துவக்கி வைத்தார்

குமரி மாவட்டம்

Update: 2024-08-27 15:12 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கன்னியாகுமரி மாவட்டம், கண்ணனூர் மற்றும் செறுகோல் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் விராலிக்காட்டுவிளை தனியார் சமூகநலக்கூடத்தில் இன்று (27.08.2024) நடைபெற்றது. இம்முகாமில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். தொடர்ந்து அவர்  பேசுகையில்:-   இந்த முகாமில்  15 அரசு துறைகளை சார்ந்த 44 சேவைகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக இன்று கண்ணனூர் ஊராட்சிக்குட்பட்ட விராலிக்காட்டுவிளை பகுதியில் நடைபெற்று கொண்டிருக்கும் மக்களுடன் முதல்வர்  முகாமில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் எந்த எந்த துறைகளை சார்ந்தது என சரிபார்க்கப்பட்டு, கோரிக்கை மனுக்களை உரிய துறையில் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. என கூறினார்.          நடைபெற்ற முகாமில் உதவி ஆணையர் கலால் தமிழரசி, வட்டார வளர்ச்சி அலுவலர், அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,  பொதுமக்கள்  உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Similar News