மயிலாடுதுறை நீதிமன்றத்தில் தொல் திருமாவளவன்

மதசார்பின்மைக்கு ஊறுவிளையாத வகையில் தமிழக அரசு கவனமாக இருக்க வேண்டும்:- முத்தமிழ் மாநாட்டில் கல்வி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து திருமாவளவன் விமர்சனம்

Update: 2024-08-27 18:42 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மயிலாடுதுறையில் 2003இல் மதமாற்ற தடை சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் ஏற்பட்ட கலாட்டாவின் காரணமாக விசிக தலைவர் தொல் திருமாவளவன் உட்பட பல்வேறு நபர்கள் மீது மயிலாடுதுறை போலீசார்போலீசார் அளித்த புகாரின் பேரில் ஆறு சட்ட பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. திருமாவளவன் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாததில் அவருக்கு பிடி.வாரண்ட்  பிறப்பித்தது. அவர் இன்று மயிலாடுதுறை நீதிமன்ற வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார் மாலையில் நீதிமன்றத்திற்கு நேரில் வந்து  கையெழுத்திட்டார் வழக்கை அடுத்த மாதம் 161ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். நீதிமன்றத்திலிருந்து வெளியில் வந்த தொவல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தோழர்கள் மீது போடப்பட்டது கிரிமினல் வழக்கு இல்லை. மக்களுக்கான அறப்போராட்டத்தில் ஈடுபட்டபோது சட்டம்-ஒழுங்குக்;காக போடப்பட்ட பொய் வழக்குகள்தான். இந்த வழக்குகளை திரும்பப்பெற வேண்டுமென்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.  ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டில் திருமாவளவனே முதல்வராக வேண்டுமென்று பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன். ஜாதிய இறுக்கம் தமிழகம் மட்டுமின்றி, அகில இந்திய அளவிலும் உள்ளது. தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜகவில் வயது மூப்பு, கட்சியில் பங்களிப்பு ஆகிய அடிப்படையில் சிலர் கட்சி பிரதிநிதிகளாக, முதல்வர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். மாநில அளவில் அம்பேத்கர் கொள்கைகள், ஜாதி ஒழிப்பை பேசுகிற கட்சிகளில் இருந்து ஒருவர் முதல்வராவது கடினம். அரசியல் களத்தில் ஜாதிய இறுக்கம் வெகுவாக இறுகிபோய் கிடக்கிறது. அதனை எனது பேச்சில் இயல்பாக குறிப்பிட்டேன். உள்ளோக்கத்துடனும், திமுக அரசுக்கு எதிராக பேசியதாக பலர் திரித்து பேசுகிறார்கள்;.  திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது. கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியிட்டது மத்திய, மாநில அரசு இணைந்து நடத்திய அரசு விழா கூட்டணிக்கு சம்பந்தமில்லாதது. மீனவர்கள் கைது செய்யப்படுவது, உடமைகள் சேதப்படுத்தப்படுவது நீடிக்கிறது. காங்கிரஸ் ஆட்சி மாறினால் ஈழப்பிரச்னை, தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு கிட்டும் என்று பலர் கூறினர். ஆனால், ஆட்சி மாறி 10 ஆண்டுகள் ஆனபிறகும் தமிழக மீனவர்கள், ஈழத்தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டு மீனவர்கள் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிபடுத்த வேண்டும். முத்தமிழ் மாநாட்டில் கல்வி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் மதசார்பின்மைக்கு ஊறுவிளையாத வகையில் தமிழக அரசு கவனமாக இருக்க வேண்டும் என்றார். கடந்த நூறு ஆண்டுகளாக மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் செயல்பட்டு வந்த ஆர் எம் எஸ் என்ற சேவையை தொடர இடம் தர மறுக்கும் ரயில்வே  நிர்வாகம் குறித்து ரயில்வே அமைச்சரிடம் அமைச்சரிடம்  கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மயிலாடுதுறை ரயில் நிலையத்திலேயே ஆர் எம் எஸ் க்கு தனி இட ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Similar News