குருணை குளத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம் எல் ஏ. சிவகாமசுந்தரி.

குருணை குளத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம் எல் ஏ. சிவகாமசுந்தரி.

Update: 2024-08-28 09:58 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குருணை குளத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம் எல் ஏ. சிவகாமசுந்தரி. கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, குருணை குளத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ - மாணவியருக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பெரிய கருப்பன் மற்றும் இரு பால் ஆசிரியர்கள், முன்னாள் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் கஸ்தூரி, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பள்ளி மாணவ- மாணவியர் என ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் குருணை குளத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 106 மாணாக்கர்களுக்கு தமிழக அரசின் விலை மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. மிதிவண்டிகளை பெற்றுக் கொண்ட மாணவ- மாணவியர் எம்எல்ஏ சிவகாமசுந்தரி மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

Similar News