திருச்செங்கோடு கோவில்களில் திருப்பணி தொடக்கம்

திருச்செங்கோடு கோவில்களில் திருப்பணி தொடக்கம்

Update: 2024-08-28 10:59 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலின் உபகோயில்களான அருள்மிகு ஆபத்து காத்த விநாயகர் திருக்கோயில், அருள்மிகு சுகந்த குந்தலாம்பிகை உடனமர் கைலாசநாதர் திருக்கோயில்களின் பாலாலய விழா மற்றும் திருப்பணி துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, கோவில் செயல் அலுவலர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி காந்தன், அர்த்தநாரீஸ்வரர் கோவில் அறங்காவலர்குழு உறுப்பினர்கள் அருணாசங்கர், அர்ஜுனன், பிரபாகர், ஒன்றிய குழு தலைவர் சுஜாதா தங்கவேல், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராஜேஸ்வரன், சர்வேயர் செல்வகுமார், கோவில் கட்டளைதாரர்கள் ராஜகணபதி, கொத்துக்காரர் அன்பரசு மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக ஆபத்து காத்த விநாயகர் கோவில், கைலாசநாதர் கோவில், சுகந்த குந்தலாம்பிகை கோவில், முருகன் கோவில் மற்றும் ராஜகோபுரம், பைரவர் கோவில், சனீஸ்வரர் கோவில் ஆகியவைகளுக்கு பாலாலயம் செய்து திருப்பணிகள் செய்ய தனித்தனியாக ஓமகுண்டம் வைத்து யாக பூஜை கலச பூஜை செய்யப்பட்டது.

Similar News