தரகம்பட்டியில் மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் எம் எல் ஏ.

தரகம்பட்டியில் மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் எம் எல் ஏ.

Update: 2024-08-28 11:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தரகம்பட்டியில் மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் எம் எல் ஏ. கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, தரகம்பட்டியில் செயல்படும் அரசு மாதிரி பள்ளியில் பயிலும் மாணவ - மாணவிகளுக்கு தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் கஸ்தூரி, கடவூர் ஒன்றிய திமுக கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ - மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பள்ளி மாணவ - மாணவியர்கள் தமிழக அரசு, பயிலும் மாணவ- மாணவர்களுக்கு வழங்கும் திட்டங்கள் குறித்து தெளிவாக எடுத்துரைத்ததால், அவர்களை பாராட்டி எம்எல்ஏ சிவகாமசுந்தரி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாணாக்கர்களுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மிதிவண்டிகளை பெற்றுக் கொண்ட மாணாக்கர்கள், தமிழக அரசுக்கும், எம்எல்ஏவுக்கும் தங்களது நன்றியை தெரிவித்தனர்.

Similar News