வெங்ககல்பட்டியில், தனியார் பேருந்து நின்றிருந்த லாரி மீது மோதி, பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவன் கீழே விழுந்து விபத்து.
வெங்ககல்பட்டியில், தனியார் பேருந்து நின்றிருந்த லாரி மீது மோதி, பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவன் கீழே விழுந்து விபத்து.
வெங்ககல்பட்டியில், தனியார் பேருந்து நின்றிருந்த லாரி மீது மோதி, பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவன் கீழே விழுந்து விபத்து. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள ஆர். கோம்பை, ரெட்டியப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் வயது 27. இவர் தனியார் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 27ஆம் தேதி மதியம் 1:30 மணி அளவில், கரூர் - பாளையம் சாலையில் இவர் ஓட்டி வந்த பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து அப்பகுதியில் உள்ள வெங்கக்கல்பட்டி எம்பி அலைன்மென்ட் என்ற நிறுவனத்தின் அருகே வந்த போது, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், சங்கரமலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் அவரது டிப்பர் லாரியை சாலை ஓரம் நிறுத்தி இருந்தார். நிறுத்தி இருந்த லாரி மீது ஜெய்சங்கர் ஓட்டிய பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது பேருந்தில் பயணித்த கரூர் மாவட்டம், மணவாடி, பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் நிதிஷ் வயது 19 என்பவர், கரூர் அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு பயின்று வந்த இவர், கல்லூரி முடித்து அந்த பேருந்தில் பின் படிக்கட்டு அருகே நின்று சென்று கொண்டிருந்தார். பேருந்து லாரி மீது மோதியதால் நின்று பயணம் செய்த நிதிஷ் நிலை தடுமாறி படிக்கட்டு வழியாக கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர் பழனிச்சாமி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், பேருந்தை அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஜெய்சங்கர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.