வருமான வரி துறை சார்பில் முன்கூட்டியே வரி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும், முறையாக வரி செலுத்தவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வருமான வரி துறை சார்பில் முன்கூட்டியே வரி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும், முறையாக வரி செலுத்தவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-08-28 15:42 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அருப்புக்கோட்டையில் வருமான வரி துறை சார்பில் முன்கூட்டியே வரி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும், முறையாக வரி செலுத்தவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் டெலிபோன் ரோடு பகுதியில் உள்ள வர்த்தக சங்க மண்டபத்தில் மதுரை வருமானவரித்துறை அலுவலகம் சார்பில் முன்கூட்டியே வரி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் வரி செலுத்தவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வருமானவரித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு முன்கூட்டியே வரி செலுத்துவதன் முக்கியத்துவம் பற்றியும், வருடாந்திர தகவல் அறிக்கை குறித்தும், எப்படி செலுத்த வேண்டும் யார் யார் செலுத்த வேண்டும், வரி செலுத்துவதால் நாடு முன்னேற்ற பாதையில் செல்கிறது எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் முறையாக வரி செலுத்தவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் வரி செலுத்துதல் நடைமுறைகள் குறித்தும் விளக்கினர். மேலும் வரி செலுத்துபவர்களின் சந்தேகங்களுக்கும், வரி செலுத்தும் போது தாங்கள் எதிர் கொண்ட பிரச்சனைகளுக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வருமானவரித்துறை அதிகாரிகள் உதயசேகர், உலகநாதன் மற்றும் மணிகண்டன், அருப்புக்கோட்டை ஆடிட்டர்கள் மற்றும் கன்சல்டர்கள், வரி செலுத்தும் வியாபார பெருமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News