கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுருவுக்கு எதிராக உளுந்துார்பேட்டையை சேர்ந்த அக்கட்சியின் எம்.ஜி.ஆர்., இளைஞரணி அணி மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், தனது மனைவி மற்றும் கட்சி நிர்வாகி சிலருடன் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். இதனையடுத்து, கட்சியின் கட்டுபாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் மாவட்ட எம்.ஜி.ஆர்.,இளைஞரணி அணி செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் அரசூர் சிவக்குமார் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பகளில் இருந்தும் நீக்கி அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.