பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் காவல்துறை விசாரணை

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் காவல்துறை விசாரணை

Update: 2024-08-29 07:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஈரோடு, மதுரை, திண்டுக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் TIPS என்று அழைக்கப்படும் தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல் இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் மின்னஞ்சலுக்கு பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் வந்துள்ளது. இதனை அடுத்து இந்தியன் பப்ளிக் ஸ்கூல் செயல்படும் பள்ளிகள் அனைத்தும் உஷார் படுத்தப்பட்டு அங்கிருந்த 20 மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டனர் அந்தப் பள்ளியின் கிளை மழலை பள்ளிகளாக திருச்செங்கோடு எட்டிமடை பகுதியில் வரும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பள்ளியின் அருகே செயல்பட்டு வரும் விஷ்ணு வித்யாலயா பள்ளி 125 மாணவர்களுக்கும் விடுமுறை விடுபட்டு ஆசிரியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது இதனால் எட்டிமடை புதூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Similar News