கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பொது விநியோக திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., லுார்துசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் நுகர்வோர் அமைப்பினர் பேசுகையில், 'கள்ளக்குறிச்சியில் ஷேர் ஆட்டோக்களுக்கு அனுமதி தர வேண்டும். ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பஸ் நிலையங்களில் கடைகளின் ஆக்கிரமிப்பகளை அகற்ற வேண்டும். அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவதை கட்டாயமாக்க வேண்டும். கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு ரசீது தர வேண்டும். அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை முகவரி வைக்க வேண்டும்.அரசு பள்ளி மாணவர்களின் மதிய உணவுத்திட்டத்திற்காக வழங்கப்படும் உணவு பொருட்களை வெளி மார்க்கெட்டில் விற்பதை தடுக்க வேண்டும். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் எடை குறைவாக உள்ளது. அதனை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். தொடர்ந்து நுகர்வோர்களின் அனைத்து கோரிக்கை மற்றும் புகார்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.