மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பாக சேலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
மாநிலம் முழுவதும் நகராட்சி, பேரூராட்சிகளில் வெண்டிங் கமிட்டி தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தி மயிலாடுதுறையில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
:- மாநிலம் முழுவதும் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வெண்டிங் கமிட்டி தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறையில் சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தரைக்கடை வியாபாரிகள் சங்க மாநில குழு உறுப்பினர் துரைக்கண்ணு உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்துக்கு விரோதமாக சாலையோர வியாபாரிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதை கைவிட வேண்டும், அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் இலவச தள்ளுவண்டி வழங்கிட வேண்டும், மத்திய அரசு (பி.எம். ஸ்வா) நிதித் திட்டத்தின்கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கி வந்த கடன் தொகையினை தொடர்ந்து வழங்கிட வேண்டும், நகர வெண்டிங் கமிட்டியில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை சாலையோர வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும், சாலையோர வியாபாரிகள் பாதுகாப்புச் சட்டத்தினை கிராம ஊராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும், அடையாள அட்டை விடுபட்டவர்களை கணக்கெடுத்து அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சாலையோர வியாபாரிகள் ஏராளமான கலந்து கொண்டு கோரிக்கை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.