விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 50. இவர், கடந்த ஓராண்டாக சின்னசேலத்தில் சார் பதிவாளராக பணி புரிகிறார். இவர், கடந்த 2014ம் ஆண்டு மரக்காணம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்தபோது, செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தை தனி நபர்களுக்கு பத்திரவு பதிவு செய்து கொடுத்தாக கூறப்படுகிறது.சிவக்குமாரிடம் நடத்திய விசாரணையில், வனத்துறை இடத்தை முறைகேடாக, தனி நபர்களுக்கு பத்திரவு பதிவு செய்து கொடுத்திருப்பது தெரிந்தது. அதையொட்டி, சிவக்குமாரை சஸ்பெண்ட் செய்து, பதிவுத்துறை தலைவர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.