கள்ளக்குறிச்சியில் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி வி.ஏ.எஸ்., மகாலில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மலையரசன் எம்.பி., மாநில பொதுக்குழுஉறுப்பினர் மணிமாறன், மாநில செயற்குழு உறுப்பினர் எத்திராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் சித்தார்த்தன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சுப்ராயலு வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேசுகையில், 'வரும் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., அமோகமாக வெற்றி பேறும்.அதற்கு கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக உழைக்க வேண்டும். கட்சியின் முப்பெரும் விழாவினை அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாட வேண்டும். ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அடிமட்ட தொண்டர்கள் அனைவரையும் அரவணைத்து கட்சி வளர்ச்சிக்கு உதவிட வேண்டும்' என்றார். மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், துணை செயலாளர்கள் அண்ணாதுரை, காமராஜ், ஒன்றிய செயலாளர்கள் பூமாரி, கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், அய்யனார், துரைமுருகன், பெருமாள், துரை, பாரதிதாசன், நெடுஞ்செழியன், அண்ணாதுரை, அசோக்குமார், ஒன்றிய சேர்மன்கள் தாமோதரன், சத்தியமூர்த்தி, வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், உட்பட பலர் பங்கேற்றனர். ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.