வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பாக அலுவலக வளாகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கே எஸ் ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர்கள் விண்ணப்பதாரர்கள் பொதுமக்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சாலை பாதுகாப்பு குறித்து திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எஸ் சரவணன் சிறப்புரை நிகழ்த்தினார். ஹெல்மெட் அணிவதன் அவசியம் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் வானத்தை விபத்து இல்லாமல் எவ்வாறு இயக்குவது வாகனம் மற்றும் ஆவணங்களை முறையாக பராமரிப்பது குறித்து விரிவாக எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.மோட்டார் வாகன ஆய்வாளர் கு பாமா பிரியா வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜெயராஜ் ஆகியோர் உரை நிகழ்த்தினர். துணை பேராசிரியர்கள் த டாக்டர் ராம்குமார், ஸ்வேதா,இந்துமதி டெங்கு காய்ச்சல் குறித்து மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்