பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஏ ஐ டி யு சி ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஏ ஐ டி யு சி ஆர்ப்பாட்டம்

Update: 2024-08-30 12:35 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு ஏ ஐ டி யு சி நாமக்கல் மாவட்ட குழு சார்பில் கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் படுகொலையை கண்டித்து நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்.50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஏ ஐ டி யு சி மாவட்ட தலைவர் ஜெயராமன்தாவி வகித்தார் மாவட்ட செயலாளர் அன்புமணி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார் ஆர்ப்பாட்டத்தில் ஏ ஐ டி யு சி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் மாநில சம்மேளன இணை பொதுச் செயலாளர் முருகராஜ் மாவட்ட பொதுச் செயலாளர் தனசேகரன்மாவட்ட செயலாளர் ஜெயராமன் மின்சார சம்மேளனம்கந்த சாமி ஏ ஐ டி யூ சி பொதுத் தொழிலாளர்கள் சங்க செயலாளர்கோபிராஜ் நகர செயலாளர் சிபிஐ சுகுமார்ஆகியோர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்ஜிகர் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டித்தும் உண்மை குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க ஒன்றிய மாநில அரசுகளை வலியுறுத்தியும், சக்திநாயக்கம்பாளையம் பகுதியில் 10 வயது சிறுமி ரஷ்மிதா படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் கொலையாளி செந்தில்குமாருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் மகளை பறிகொடுத்து தவிக்கும் பிறப்பு குடும்பத்திற்கு 25 லட்சம் நிவாரணம் தமிழக அரசு வழங்க வேண்டும்கிருஷ்ணகிரி மாவட்டம் கத்தி குப்பம் தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பள்ளிபாளையம் ஓட பள்ளி பகுதியில் மைக்ரோ பைனான்ஸ் ஊழியர்கள் அடாவடித்தனத்தால் ஒரு பெண் தற்கொலை செய்துள்ளார் இதனால் பல குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகிறது எனவே மைக்ரோ பைனான்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் முன்னிறுவனங்கள் கடன் கொடுத்து கொள்ளையடித்து வருவதை தடை செய்ய வேண்டும் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சுஜாதா குடும்பத்திற்கு 25 லட்சம் நஷ்ட ஈடு மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடமிருந்து தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும் விசைத்தறி தொழிலாளர்கள் பெற்றுள்ள கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும் விசைத்தறி தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு பத்தாயிரம் நிவாரணம் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது

Similar News