கரியாலூர் வனத்துறை கூட்டரங்கில் மதுவிலக்கு விழிப்புணர்வு மற்றும் அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த விளக்கக் கூட்டம் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைலையில் நடைபெற்றது. காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் மற்றும் வனத்துறையினருடன் இணைந்து கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள கிராம மக்களின் அடிப்படை தேவைகளை கண்டறிந்து வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு விதமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு மலைவாழ் மக்களுக்கு அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு விதமான நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு மதுவிலக்கு தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்நிகழ்வில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி திஷா மித்தல்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி,கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் லூர்து சாமி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர்,மலைவாழ் மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.