ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு மாதத்திற்கு 163 தடை உத்தரவு: மாவட்ட ஆட்சியர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 9ந் தேதி நள்ளிரவு முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை 163 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவு பிறப்பித்துள்ளார். தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை உள்ளிட்டவைகள் வரவுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக இந்த 163 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 2 மாதங்கள் 163 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. குறிப்பாக செப்டம்பர் 9ந்தேதி முதல் செப்டம்பர் 15ந்தேதி வரையிலும் மீண்டும் அப்டோபர் 25ஆம் தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 31ந் தேதி வரை 163 தடை உத்தரவு அமலில் இருக்கும் என குறிப்பிட்டப்பட்டுள்ளது. மேலும் 163 தடை உத்தரவு அமலில் உள்ள நாட்களில் வெளிமாவட்டத்தை சேர்ந்த வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடபட்டுள்ளது.