திருமணம் மண்டபகட்டிடம் இடிக்கும் பொழுது உயிர்த்தப்பிய ஐந்து தொழிலாளர்கள்

மயிலாடுதுறையில் தனியார் திருமண மண்டபம் ரிப்பேர் பணியின் போது திடீரென இடிந்து விழுந்தது.  மயிரிழையில் 5 தொழிலாளர்கள் உயிர்த்தப்பினர் அனுமதி வாங்காமல் பணி செய்த திருமண மண்டபத்திற்கு நகராட்சி நோட்டீஸ்

Update: 2024-08-31 12:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மயிலாடுதுறை திரு இந்தளூரில் தனியார் திருமண மண்டபம் ஒன்று இயங்கி வருகிறது 1974 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்த கட்டிடம் 50 ஆண்டுகளை கடந்தும் செயல்பட்டு வருகிறது இந்நிலையில் திடீரென்று மண்டபத்தில் மேற்கூரை காரைகளை பெயர்த்து ஃபால் சீலிங் அடிக்க முடிவெடுத்தனர். மேற்கூரை காரைகளை உடைத்துக் கொண்டிருந்தனர் காலையில் ஆரம்பித்த பணி மதியம் உணவு இடைவெளிக்கு சென்றபோது திடீரென்று ஒட்டுமொத்த கூடமும் இடிந்து தரையில்விழுந்தது. அந்த நேரத்தில் 5தொழிலாளர்களும் மதிய உணவு அருந்த சென்றிருந் ததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. இது கண்ட மயிலாடுதுறை நகராட்சி நகரமைப்பு அலுவலகத்தினர் இடிந்து விழுந்து கிடக்கும் மண்டபத்தை பார்வையிட்ட னர் .  மயிலாடுதுறை நகராட்சியிடம் அனுமதி வாங்காமல் பணி செய்துள்ளது  தெரியவந்தது. இந்த மண்டபத்தை புதுப்பிக்க நகராட்சி யின் அனுமதியோ அல்லது டி. டி. சி. பி. அப்ரூவலோ பெறவில்லை என தெரிய வந்தது.. அந்த மண்டப  நிர்வாகத்திற்கு , முறைப்படி நகராட்சியிடம் அனுமதி வாங்க வேண்டும் அதுவரை பணி தொடரக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். பழமையான கட்டிடத்தில் வேலை பார்க்கும் போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பணியை செய்ய வேண்டும் என்று நகராட்சியினர் தெரிவித்துள்ளனர். மயிலாடு துறையில் பொது பயன்பாட்டில் உள்ள வணிக ரீதியான கட்டிடங்களை நகர திட்ட அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். நகரில் 50 ஆண்டுகளை கடந்த கட்டிடங்களை பூச்சு பூசி, புது கட்டிடம் மாதிரி வைத்து உள்ளார்கள். குறிப்பாக பெரிய கடை வீதியில் உள்ள பழங்கால கட்டிடங்கள் இடியும் நிலையில் உள்ளது அவற்றை ஆய்வு செய்து விபத்துகள் ஏற்படும் முன் நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News