நரிக்குறவர் காலனிக்கு போடப்பட்ட சாலை ஐந்து மாதத்தில் பல் இளித்தது
மயிலாடுதுறை பல்லவராயன் பேட்டை நரிக்குறவர் காலனியில் புதிதாக போடப்பட்ட சாலையில் பழுது ஏற்பட்டதால் மழைநீர் தேங்கியுள்ளது குழந்தைகளுடன்நரிக்குறவர்கள் நடந்து செல்வதில் சங்கடம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்துஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமா ய் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
மயிலாடுதுறை நரிக்குறவர் காலனியில் சாலை சரியாக போடாததால் சிறு மழைக்கே தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் 150க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாய குடும்ப மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு ம் இன்றைய தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், மிகவும் பின்தங்கி நரிக்குறவர் சமுதாயத்திற்கு நன்மைகளை செய்துவரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை பல்லவராயன் பேட்டையில் உள்ள நரிக்குறவர் காலனிக்கும் சிறப்பு நிதி ஒதுக்கி சிமெண்ட் சாலை அமைத்துக் கொடுக்க உத்தரவிட்டார்கள். அதன்படி கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை மிகவும் மோசமானதாகவும் தரம் அற்றதாகவும்வேலை செய்யப்பட்டதால் சிமெண்ட் சாலை முற்றிலும் மோசமடைந்து ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறி, நேற்று பெய்த சிறு மழைக்குகூட தாக்குப் பிடிக்க முடியாமல் குளம் போல தண்ணீர் தேங்கி நிற்கின்றது. அச்சமுதாய மக்கள் மட்டுமல்லாமல் குழந்தைகள், சிறுவர் சிறுமிகள் இந்த தண்ணீரைக் கடந்து தான் பள்ளிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆகவே இந்த விஷயத்தில் உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சம்பந்தப்பட்ட சாலை போட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்தும், சரியாக போடாத சாலையை மீண்டும் சரி செய்து எதிர்வரும் மழை காலத்திற்குள் தண்ணீர் தேங்காதவாறு அமைத்து தர நரிக்குறவர் சமூக மக்கள் சார்பாக சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம்கோரிக்கை விடுத்துள்ளார்.